Monday, September 25, 2017

ஸ்ரீசக்ர டாலர் - தொடர் - பகுதி 3

அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள். நாம் ஏற்கனவே கூறியிருந்தபடி ஸ்ரீசக்கர டாலருக்கான பதிவின் தொடர்ச்சி இது. ஸ்ரீசக்ர டாலர் பூஜைக்கான சங்கல்பத்திற்கு பெயர்கள் வந்திருக்கிறது. அக்டோபர் 7ம் திகதி வரை தினமும் திரிசதி சொல்லி பூஜை நடைபெறும். 7ம் தேதி அன்று குருஜி ஸ்ரீமான்பரணிகுமார் கையால் ஆசீர்வாதம் பெற்று ஸ்ரீசக்ர டாலரை வாங்கிக் கொள்ளலாம்.
குறிப்பு:
கிட்டத்தட்ட 3க்கும் மேற்பட்ட குருமார்களிடம் கேட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டோம். தாராளமாக ஸ்ரீசக்ர டாலரானது அனைவரும் அணிந்து கொள்ளலாம். யாருடைய தேவையில்லாத கேள்விகளுக்கும் அன்பர்கள் பதிலளிக்க வேண்டாம். மேலும் இந்த விஷயத்தில் விருப்பம் இல்லாத யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை.

Friday, September 22, 2017

நவராத்திரியில் அனைவருக்கும் ஸ்ரீசக்ர டாலர்

அனைவருக்கும் வணக்கம்.

நவராத்திரி என்பது சாக்த - சக்தி வழிபாட்டில் மிக முக்கியமானதாகும். அதிலும் ஒவ்வொரு வருடத்திலும் வரும் நான்கு நவராத்திரிகளில், புரட்டாசி மாதம் வரும் சாரதா நவராத்தியானது முக்கியமானதாகும். 

இந்த நவராத்திரியில் அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க வெள்ளியில் செய்யப்பட்ட ஸ்ரீசக்ர டாலர் - திரிசதி பூஜை செய்து கொடுக்கிறோம். வெள்ளியில் இருக்கும் டாலரை சிகப்பு கயிற்றில் கட்டி அணிந்து கொள்ளலாம். தொடர்ந்து 15 நாட்கள் பூஜையில் வைத்து தரப்படும் ஸ்ரீசக்ரத்தின் மகிமை வார்த்தைகளில் அடங்காதது. ஸ்ரீசக்கரம் ஒருபக்கமும் - அம்மன் மறுபக்கமும் இருக்கும். 

சரியாக நவராத்திரி முதல் நாள் முதல் பூஜையில் வைத்திருக்கிறோம். அக்டோபர் 7ம் தேதி ஸ்ரீவித்யா சிரோன்மணி ஸ்ரீமான் பரணிகுமார் குருஜி அவர்கள் நவாபரண பூஜை முடித்து அதன்பின் 51 சுமங்கலிகள் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் சொல்லிய பின் ஸ்ரீசக்ர பூஜை முடிவுறும்.

ஸ்ரீசக்ர டாலர் வேண்டும் அன்பர்கள் - தங்களது பெயர், ராசி, நக்ஷத்ரம், முகவரி ஆகியவற்றை இமெயில்/வாட்ஸ்அப் செய்தால் பூஜையில் சங்கல்பம் செய்து பிரசாதம் அக்டோபர் 9ம் திகதி முதல் அனுப்பப்படும்.

ஸ்ரீசக்ர டாலருக்கான காணிக்கை அவரவர்கள் விருப்பப்படி ஏற்றுக் கொள்ளப்படும். 

மேலும் விபரங்களுக்கு:
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com

Thursday, September 21, 2017

Weekly Tamil Horoscope From 21/09/2017 to 27/09/2017

Weekly Tamil Horoscope From 21/09/2017 to 27/09/2017
வார ராசி பலன்கள் Raasi Palan Tamil The Hindu


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com

Wednesday, September 20, 2017

18 ஜூன் 2013 - ஹரித்துவாரில் வெள்ளம் வந்த நாள்.

18 ஜூன் 2013 - ஹரித்துவாரில் வெள்ளம் வந்த நாள். ஆனி மாதம் சுக்ல பக்ஷ நவமி தினம்.

ஹரித்துவார் மட்டுமல்ல உலகமே பிரமிப்பாக கவனித்த நாள்.

சிவன் சிலையை வெள்ளமானது வேகத்துடன் கடந்த சென்றதை உலக மக்கள் அனைவரும் உன்னிப்பாக கவனித்தனர். பலர் சிவனுக்கே இந்த நிலைமையா என பரிதாபப்பட்டனர் - சிலர் இது என்ன கடவுள் என எக்காளமிட்டனர். யாருக்கும் தெரியாது சிவனுக்கு இந்த இரண்டுமே ஒன்றுதான் என்று. 

சரி விஷயத்திற்கு வருவோம் - விஷயம் விஷயமானது மட்டுமல்ல சிறிது விஷமமானதும் கூட.இலங்கை இன படுகொலைக்குப் பிறகு ராஜபக்‌ஷே குடும்பமானது 2013ம் ஆண்டு சித்திரை மாதம் அமாவாசை தினத்தன்று ஹரித்துவாரில் தில ஹோமம் செய்திருக்கிறார்கள். அதன் பிறகே சனியும் ராகுவும் ஒரே வீட்டில் இருந்து சூரியன் திரிகோணப்படி சம்பந்தப்படும் போது வெள்ளம் ஏற்பட்டு ஹரித்துவாரை சுத்தம் செய்து கொண்டது.

ஒரு நாட்டினுடைய மன்னனானவன் தனது பாவங்களைப் போக்கி கொள்ள ஒரு ஆற்றிற்கு வரும் போது - ஆறானது வருண பகவானின் மூலம் தனது பாவங்களைப் போக்கிக் கொள்கிறது. சாஸ்திரம் இப்படி சொல்கிறது.

இதை ஏன் இப்போது சொல்கிறேன் என கேட்கிறீர்களா? ஏதோ சொல்ல வேண்டும் என தோன்றியது, அவ்வளவுதான்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417

Email: ramjothidar@gmail.com

Web: www.kuppuastro.com

பொறுத்திருந்து வேடிக்கை பார்ப்போம்.

வாக்கியப் பஞ்சாங்கப்படி கார்த்திகை மாதம் சூரியன் சனியுடன் இணையும் போது - ராகுவானவர் பாக்கியஸ்தானத்தில் இருப்பார். அப்போது அரசியலில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழும்.
பொறுத்திருந்து வேடிக்கை பார்ப்போம்.Perungulam Ramakrishna Josiyar

+91 89390 41417

Email: ramjothidar@gmail.com

Tuesday, September 19, 2017

வதூ - வரன் பார்ப்பவர்களின் கவனத்திற்கு

அனைவருக்கும் வணக்கம். சில மேட்ரிமோனி வெப்சைட்டுகளில் பொருத்தம் தேவையில்லை என சொல்லி வருகிறார்கள். அதை நம்ப வேண்டாம். எந்த ஒரு பொருத்தமாக இருந்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட ஜோதிடர்களிடம் கருத்துக்களை கேட்டு அதன் பிறகு முடிவெடுப்பது சிறந்தது.
குறிப்பு:
ஜோதிட பொருத்தம் பார்க்க வேண்டாம் என்று சொல்லி விட்டு ஜாதகக் கட்டங்களை அவர்கள் வெப்சைட்டுகளில் போடுவதேனோ?

இன்று மஹாளய பக்ஷ அமாவாசை.

இன்று மஹாளய பக்ஷ அமாவாசை

கடவுள் இருக்கிறாரா என்பது விவாதத்திற்குரிய விஷயம். ஆனால் நமது முன்னோர்கள் இருந்தது உண்மைதானே?
புரட்டாசி மாசம் என்பது பூமியினுடைய நீள் வட்ட பாதையில் பூமி - சூரியனுக்கு மிக அருகில் செல்லும் காலமே புரட்டாசி ஆகும். இந்த காலகட்டத்தில் நமது முன்னோர்களை வழிபடுவது கட்டாயமாகும்.

இன்று - 19.09.2017 - செவ்வாய்கிழமை - முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வதன் மூலம் நமது குறைகளை நிவர்த்தி செய்ய முடியும்.

குறிப்பு:
அமாவாசை திதியானது இன்றா நாளையா என பெரிய குழப்பம் நிலவி வருகிறது.

சைவம் சார்ந்த மரபினுருக்கு இன்றும்(19.09.2017) - வைணவம் சார்ந்த மரபினருக்கு நாளையும்(20.09.2017) அமாவாசையாகும். 

எந்த கடமைகள் இருந்தாலும் முதலில் இன்று முன்னோர்களுக்கு முடித்து விட்டு பின் செய்வது சிறந்தது.

தந்தையார் இல்லாதவர்கள் கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். 

தந்தையார் இருப்பவர்கள் இன்று காலை முன்னோர்களை நினைத்து வணங்குவது நன்மை தரும்.

வீட்டில் யாரேனும் இறந்திருந்தாலும் கட்டாயம் இன்றைய தினம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com

Monday, September 18, 2017

பூர நக்ஷத்ரத்தில் பிறந்த புண்ணியவான்களே - புண்ணியவதிகளே

பூர நக்ஷத்ரத்தில் பிறந்த புண்ணியவான்களே - புண்ணியவதிகளே 


பூர நக்ஷத்ரத்தில் பிறந்த புண்ணியவான்களே - புண்ணியவதிகளே இன்று இரவு 9.23 முதல் அக்டோபர் மாதம் 9ம் தேதி வரை மிக கவனமாக இருக்கவும்.
முக்கியமாக வாகனம் பிரயோகிக்கும் போது - பேசும் போது - பண விஷயத்தை கையாளும் போது - வாக்கு கொடுக்கும் போது ஆகியவற்றில் மிக அதிக கவனம் தேவை.
வேகம் கூடவே கூடாது. நிதானம் நிதானம் நிதானம்.
முடிந்தவரை அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் தாயாரை வணங்கவும்.

Tuesday, September 12, 2017

தேவ ப்ரஸ்ணம்: தொடர் பகுதி - 04:

தேவ ப்ரஸ்ணம்: தொடர் பகுதி - 04:
ஸ்வாமிக்கு ப்ரஸ்ணம் பார்க்கும் போது வந்திருக்கும் லக்னத்திற்கு ஒன்பதாமிடம் என்று சொல்லக்கூடிய பாக்கியஸ்தானத்தை வைத்துதான் கோவிலின் நிர்வாகஸ்தர்கள் - கோவிலின் புண்ணிய பலம் - புண்ணியகாரியங்கள் ஆகியவற்றை சொல்ல முடியும். 


பொதுவில் ஜாதகம் பார்க்கும் போது ஒன்பதாமிடம் பாக்கியஸ்தானம் என்று அழைக்கப்படும். இந்த இடத்தை வைத்துத்தான் தந்தையாரைப் பற்றி சொல்ல முடியும். மேலும் காரகத்துவ அடிப்படையில் சூரியனை வைத்தும்  தந்தையாரைச் சொல்லலாம். தேவ ப்ரஸ்னத்தில் ஒரு கோவிலுக்கு தந்தையார் என்பவர் நிர்வாக தலைவராகவோ அல்லது தர்மகர்த்தாவாகவோ இருப்பார். சில காலங்கள் முன்பு வரை ஊரில் வசதியாக இருக்கும் நபரை கோவிலில் முன்னிலைப்படுத்துவார்கள். எனவே அவர் கோவிலிருந்து எதையும் அபகரிக்க மாட்டார். இறைபணியை சேவையாக செய்தார்கள். கோவிலினுடைய தேவதைக்குப் பயந்தார்கள். 
பிற்காலங்களில் இந்த முறை மாறியது. அரசாங்கம் உள் நுழைந்தது. அரசியல் விளையாட்டில் 5 வருடத்திற்கு ஒரு முறை அரசாங்கம் மாறுவது போல் நிர்வாகக் குழுவும் மாறியது. கோவிலினுடைய சாந்நித்யம் கெட்டது. கோவிலுக்கு வேண்டாதவர்கள் நிர்வாகத்தில் நுழைந்தார்கள். கோவிலினுடைய தேவதையை கல்லாகப் பார்த்தார்கள். பயமோ மரியாதையோ இல்லை. அந்த காலங்களில் அரசாங்கம் கோவிலில் நுழையாது.

இன்று நாம் ப்ரஸ்ணம் பார்க்கும் கோவில்களில் பாதி கோவில்களில் பாக்கியஸ்தானம் கெட்டுப் போய் இருக்கிறது. 

கடைசியில் கோவில் வழிபடும் இடம் என்பதைத் தாண்டி - கோவில் கார்ப்பரேட்களின் கையில் சிக்கித் தவிக்கிறது.

குறிப்பு: உடனே கோவில் பூஜை செய்பவர்களை பற்றி எழுதவில்லையே என்று அங்கலாய்க்க வேண்டாம். இந்த தொடரில் அதுவும் வரும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com
Web: www.kuppuastro.com

தொடரும்.....

Monday, September 11, 2017

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று நக்ஷத்ரப்படி பிறந்த நாள் கொண்டாடும் ஸ்ரீவித்யா முறையின் விடிவெள்ளி - பாசத்தின் பிறப்பிடம் - அன்பின் சிறப்பிடம் - குழந்தை மனம் கொண்ட பாலகன் - வன்மையிலும் மென்மை காட்டும் மனிதப்புனிதர் - எம் குருநாதர் ஸ்ரீமான் பரணிகுமார் ஸ்வாமிஜி அவர்களுக்கு எம் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்.