Tuesday, December 16, 2014

சனிப் பெயர்ச்சி ஸ்பெஷல்

சனிப்பெயர்ச்சி:
நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி -  16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை  கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப்  பஞ்சாங்கப்படி சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை வருட  காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார்.




ராசி    சனியின் நிலை:
மேஷம்    அஷ்டமத்து சனி      
ரிஷபம் 
   கண்டச்சனி      
மிதுனம்    ரண ருண சனி      
கடகம்    பஞ்சம சனி      
சிம்மம்    அர்த்தாஷ்டம சனி      
கன்னி    தைரிய வீர்ய சனி      
துலாம்    வாக்கு சனி அல்லது பாத சனி      
விருச்சிகம்    ஜென்ம சனி      
தனுசு    விரைய சனி அல்லது சிரசு சனி      
மகரம்    லாபச்சனி      
கும்பம்    கர்ம சனி      
மீனம்    பாக்கிய சனி   



உங்கள் ஜாதகத்திற்கான பிரத்யேக பலன்கள்



மேஷம்:
நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

அசுபதி: சிறுசிறு உஷ்ண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். தூக்கத்தைக் கட்டுப்படுத்தாதீர்கள். எந்த பிரச்சனையாக  இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகவும். குடுமப வாழ்வில் பொறுமை தேவை. முருகனை வணங்குங்கள்,  முன்னின்று அனைத்தையும் நடத்துவான்.
பரணி : இடையூறுகள் எடுத்த காரியத்தில் உறுதியாக இருங்கள். வீண் பேச்சு கூடவே கூடாது. வியாபார ரீதியாக  போட்டிகள் வரலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். வம்பு வழக்கு கூடவே கூடாது. துர்க்கையை  வணங்கினால் எதிலும் சக்ஸஸ்தான்.
கார்த்திகை - 1 : பிள்ளைகளால் தொந்தரவு நேரலாம். வெளிவட்டாரபழக்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.  மனக்குழப்பம் ஏற்பட்டால் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வரவும். சூரிய பகவானை மனதில் நினைத்துக்  கொண்டே இருந்தால் மனதிடம் அதிகரிக்கும். 
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். முடிந்தவரை சனீஸ்வரருக்கு எள்  எண்ணை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவும்.  செவ்வாய்கிழமைதோறும் அறுகம்புல்லை விநாயகருக்கு  அர்ப்பணிக்கவும்.



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரிஷபம்:நக்ஷத்திர ரீதியான பலன்கள்:
கார்த்திகை 4 : உங்களுக்கு ஏற்றத்தையும், பொலிவையும் கொடுக்கும் காலமிது. வெளியூர் பயணங்களால் அனுகூல்யம்  உண்டு. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியையும் மகான்களையும் வியாழக்கிழமைகளில்  தரிசனம் செய்து வாருங்கள்.


ரோகினி : ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் தடைகள் விலகும். எதிரிகளின் பலம் என்ன என்று உங்களுக்கு  தெரிய வரும். குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். அனுமன் காயத்ரியை சொல்ல சொல்ல  வாழ்வில் இனிதே நடக்கும்.

மிருகசீரிடம் 1 - 2 : உடல்நலம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வும் இடமாறுதலும் கிடைக்கும். பொருளாதார நிலை  சிறப்பாக இருக்கும். கலைஞர்களுக்கு இது சிறப்பான காலம். ஸ்ரீமுருகனை ஆராதனம் செய்தால் எல்லா நலமும்  கிடைக்கும்.


பரிகாரம்:
வெள்ளிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். முடிந்தவரை வெண் மொச்சை  சுண்டல் செய்து வழங்கவும்.  வெள்ளிக்கிழமை தோறும் மல்லிகை மலரை பெருமாளுக்கு சாத்தி வழிபடவும். பெருமாள்  கிருபையால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மிதுனம்:
நக்ஷத்திர ரீதியான பலன்கள்:


மிருகசீரிடம் 3 - 4: உங்களுக்கு நல்ல பலன்கள், நல்ல முறையில் வந்து சேரும். பொருளாதார முன்னேற்றம், வழக்கு  வியாஜ்ஜியங்களில் வெற்றி என நற்பயன்கள் வந்து சேரும் காலமிது. தாய்தந்தையரை வணங்கி எந்த காரியங்களையும்  ஆரம்பியுங்கள், வெற்றிகளைக் குவிப்பீர்கள்.

திருவாதிரை: உத்தியோகத்தில் பதவிஉயர்வு, இடமாற்றம், பணியாளர்கள் ஆதரவு, மேல்மட்ட அதிகாரிகளின் ஆதரவு என  நல்ல பலன்கள் ஏற்படும். சிறுசிறு பாதிப்புகள் வந்தாலும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஸ்ரீ  மஹாலக்ஷிமி காயத்ரி சொல்லி, வணங்கிவிட்டு காரியங்களை ஆரம்பியுங்கள்.

புனர்பூசம் 1 - 2 -3: நேரம் கிடைக்கும் போதெல்லாம் உழையுங்கள், அது ஒன்றே உங்களது பலம். அரசாங்க அனுகூல்யம்  கிடைக்கும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை அணிகலன்கள் சேரும். ஆதிதயஹ்ருதயம் சொல்லுங்கள்.  ஆதித்யனின் அருளால் அனைத்தும் நடக்கும்.


பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்கு செல்லுங்கள், முடிந்தவர்கள் பாடல் பெற்ற  ஸ்தலங்களுக்கும் செல்லலாம். செல்வங்கள் குவியும். தாமரை மலரை அருகிலிருக்கும் பெருமாளுக்கு அர்பணியுங்கள்,  அவர் எல்லாவற்றையும் சீராக நடத்திவைப்பார்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`



கடகம்:

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:


புனர்பூசம் 4: உடல்நலம் சிறப்பாக இருந்துவரும். புதிய மனை, வீடு, வாகனம் அமையும். வழக்கு வியாஜ்ஜியங்களில்  வெற்றி கிடைக்கும். உறவினர், நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். சோம்பலைத் தவிர்த்து முயற்சி மேற்கொண்டால்  கல்வியில் சாதனை பெற முடியும். ஸ்ரீ மஹாலக்ஷிமி அஷ்டகம் சொல்லி தினப்பொழுதை ஆரம்பித்தால் எதிலும்  வெற்றிதான்.

பூசம்: தொழில், கூட்டுவியாபாரம், உத்தியோகம் ஆகியவைகளில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். எந்த ஒரு செயலையும்  மனமகிழ்ச்சியோடும் சிறு புன்முறுவலோடும் முயற்சியோடு ஆரம்பியுங்கள். அதற்கான பலன் உங்கள் கைகளில் வரும்.  புதிய் தொழில், வீடு, வாகனம், மனை ஆகியவை உங்களுகு அமையும் பொன்னான காலமிது. ஸ்ரீ துர்க்கா, லக்ஷிமி,  ஸ்ரஸ்வதி ஆகியோரின் காயத்ரி மந்த்ரங்களை பாராயணம் செய்யுங்கள், அனைத்தும் உங்களைத்தேடி வரும்.

ஆயில்யம்: புதிய உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் சனிப்பெயர்ச்சியை சந்திக்கப் போகிறீர்கள். நீங்கள் சற்று இறங்கி  வந்து வாழ்க்கைத்துணையுடனும், நண்பர்களிடமும், உறவினர்களிடமும் அனுசரித்துப் போனீர்களானால் சிறப்பாக  இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் கவனம் தேவை. ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் சொல்ல சொல்ல  சொல்லொன்னாத் துயரமும் அகன்று விடும்.

பரிகாரம் : முடிந்தால் திருவண்ணாமலை அல்லது  பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வரவும். பௌர்ணமியன்று  நிலாவில் 10 நிமிடங்கள் தியானம் செய்வது நல்லது.  எலுமிச்சம் பழ சாரை பிரதோஷ நேரத்தில் சிவனுக்கு அபிஷேகம்  செய்து வர குழப்பங்கள் அகலும். மனம் தெளிவடையும்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிம்மம்:

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

மகம்: புதிய பாதைகளில் செல்லும்போது சோதனைகள் வந்தாலும் முயற்சி செய்தால் சாதனைகளாக மாற்றலாம்.  மருத்துவச் செலவுகள் பயமுறுத்தலாம், எனவே சின்னப் பிரச்சினையானாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது  நல்லது. தாங்களாக மருந்து உட்கொள்வதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துப் போங்கள். புருஷ  ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் படித்தால் நீங்கள் செல்லும் பாதையில் ஒளி கிடைக்கும்.

பூரம்: எந்த டாக்குமெண்ட் என்றாலும் கையெழுத்து போடும் முன் யோசனை செய்யவும். சோம்பலைத் தவிர்க்கப்  பாருங்கள். தொழில், வியாபாரம், உத்தியோதத்தில் போட்டிகள் இருந்தாலும் அதை சமாளிக்கும் மனதைரியமும்,  வலிமையும் தங்களுக்கு உண்டு என்பதனை உணருங்கள். சிவபுராணம் மற்றும் கோளறு பதிகம் படிப்பதனால் நன்மை  நாடி வரும்.
உத்திரம் 1ம் பாதம்: உத்தியோகம் பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துப் போவது நல்லது. வேலைப்பளு  கூடினாலும் தங்களுக்கு இது நல்ல அனுபவமாக அமையும். எதிர் பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கவில்லையே என  ஆதங்கப்படவேண்டாம், அது நல்லதற்கே என நினையுங்கள். எதிலும் எங்கும் முன்கோபம் கூடவே கூடாது. இராம நாம  ஜெபம் மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று சந்தனாதி தைலத்தை அபிஷேகம்  செய்து விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் ஸ்ரீசூரியனார் கோவில் சென்று வழிபட்டு வரலாம். காலையில் சூரியன்  உதிக்கும் போது தரிசம் செய்வதும் நன்மையைத் த்ரும். “எருக்க மலரை” சிவனுக்கு மாத சிவராத்திரி அன்று அர்ப்பணம்  செய்து வணங்கி வர நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுக்கு அனைத்து காரியங்களும் தங்குதடையின்றி  நடக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கன்னி:

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

உத்திரம் 2 - 3 - 4ம் பாதங்கள்: சொத்துக்களில் மூலம் செலவுகள் நேரலாம். குடும்பத்தில் கருத்து வேற்றுமை  ஏற்பட்டாலும் உங்கள் கருத்து ஏற்கப்படும். பெரிய முதலீடுகளில் ஈடுபடும்போது தகுந்த நபரிடம் ஆலோசனை பெற்று  செய்யவும். சூடு, நரம்பு சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம். எச்சரிக்கை. குரு பகவானை நினைத்து எதையும்  ஆரம்பித்தால் எதிலும் வெற்றிதான்.
ஹஸ்தம்: உங்களுக்கு நெருக்கமானவர்களே உங்களுக்கு துரோகம் செய்யும் நிலையிருந்து மாற்றம் வந்துவிட்டது.  வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து போங்கள். பணப்பற்றாக்குறை இன்றி இருக்க சியாமளா தண்டகம் படியுங்கள்.

சித்திரை 1 - 2ம் பாதங்கள்: உத்தியோகத்தில் இடமாற்றம், பணிஉயர்வு உண்டு. எதிர்பாராத செலவினம் ஏற்படலாம்.  கூட்டுத்தொழிலில் ஈடுபடுபவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

பரிகாரம் : புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.  வெண்ணையை ஆஞ்சநேயருக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வர தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கப்  பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்தவந்த பிரச்சனைகள் மாறும்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

துலாம்:


நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

சித்திரை 3 - 4ம் பாதங்கள்: உடல்நலம் மற்றும் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தடைகளைத்தாண்டி  வெற்றிகளைக் குவிப்பீர்கள். கல்வியில் மந்தமான சூழ்நிலை விலகி நன்மை கிடைக்கும். கல்வி மற்றும் தொழிலில்  சிறக்க ஸ்ரீ கணபதியை வணங்குங்கள்.

ஸ்வாதி: உங்களுக்கு அரசாங்க சம்பந்தப்பட்ட காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த  கசப்புணர்ச்ச்சி நீங்கும். வரவேண்டிய கடன்பாக்கி வந்துசேரும். காதல் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.  ஸ்ரீமஹாலக்ஷிமியை வணங்கி எதை ஆரம்பித்தாலும் வெற்றிதான்.


விசாகம் 1 - 2 - 3ம் பாதங்கள்: உங்கள் சகோதர சகோதரிகளின் உறவு பலமாகும். புதிய தொழில் ஆரம்பிப்பீர்கள். நீண்ட  நாட்களாக உள்ள திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறும். ஸ்ரீஆதித்யஹ்ருதயம் சொல்ல சொல்ல தடைகள்  விலகி நன்மை பிறக்கும்.

பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனுக்கு நெய் விளக்கு ஏற்றி  வணங்கி வரவும். முடிந்தவரை  கருட தரிசனம் செய்யவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.  சனிக்கிழமைதோறும் வில்வ இலையை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும்.
------------------------------------------------------------------


விருச்சிகம்:

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:


விசாகம், 4ம் பாதம்: உடல்நலம் சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை. எந்த வேலையிலும் முழுமுயற்சி  தேவை. உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். ஆதித்யஹ்ருதயம் மற்றும் ஸ்ரீ விஷணு  ஸகஸ்ரநாமம் சொல்வது பயனைத்தரும்.

அனுஷம்: தொழில் மற்றும் வியாபார விஷயங்களில் கவனத்துடன் செயல்பட்டால் வெற்றியடைவீர்கள். மனதில் புதிய  உற்சாகமும் எழுச்சியும் பிறக்கும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளிடம் உறவு மேம்படும். கூடிய விரைவில் எதிர்பார்த்த  திருமணம் நடக்கும். ஸ்ரீ லலிதா த்ரிசதி சொல்ல சொல்ல வாழ்வில் ஒளி பிறக்கும்.

கேட்டை: கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சிலருக்கு வீடு, மனை, வாகனம் யோகம்  மெதுவாக கிடைக்கும். எந்த ஒரு காரியத்திலும் ஆரம்பத்திலுள்ள முயற்சியைக் குறைக்காமலிருந்தால் வெற்றி  கிடைக்கும். ஸ்ரீ முருக வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

பரிகாரம் : செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும்.  நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம். இலுப்பைஎண்ணையில் வீட்டில் விளக்கு ஏற்றவும். செவ்வாய்தோறும்  செவ்வரளிமாலையை அம்மனுக்கு அர்ப்பணித்து வலம் வந்து வணங்குங்கள்.


----------------------------------------------------------------------------



தனுசு:

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:


மூலம்: உடல்நலம் சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை. கடன் தொல்லைகள் வரலாம். முடிந்தவரை கடன்  வாங்காமிலிருப்பது நல்லது. எந்த தருணத்திலும் டென்ஷன் கூடவே கூடாது. செவ்வாய் கிழமையன்று முருகன்  வழிபாடு நன்மையைத் தரும்.

பூராடம்: மனதில் எதையும் வைத்திராமல் யாருடனாவது கலந்துரையாடுங்கள். முடிந்தவரை தனிமையைத் தவிருங்கள்.  வெளியூர் வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். பண விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொடுக்கல்  வாங்கலில் தகராறு வரலாம். முடிந்த வரை வெள்ளிக் கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரவும்.

உத்திராடம் 1ம் பாதம்: உற்சாகம் இல்லா காரியங்களில் ஈடுபட வேண்டாம். மனத்தை ஒருமுகப்படுத்தி எந்த  காரியத்திலும் ஈடுபடுங்கள். அரசுவழியில் சோதனைகள் வரலாம் கவனம். கூட்டுதொழில் ஆரம்பிப்பதாய் இருந்தால்  நன்கு பரிசீலித்து ஈடுபடவும். மகான்களை வழிபடவும்.


பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும்.  கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும்.   சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து   வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக  முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம்  அதிகரிக்கும்.

------------------------------------------------------------------
மகரம்:

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:


உத்திராடம் 2 - 3 - 4ம் பாதம்: தொழிலில் அதீத முன்னேற்றம் ஏற்படும். போட்டிகள் பொறாமைகள் விலகும். சந்தையில்  உங்கள் வியாபாரம் பெருகும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். வாராக்கடன்கள் வந்து சேரும். சகோதர சகோதரி்களிடம்  அன்பு கூடும். ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை வணங்கினால் எல்லாம் தடையின்றி நடக்கும்.

திருவோணம்: சில காலங்களாக இருந்த சோதனைகள் விலகி சாதனைகள் வரும். தொழிலில் அபிவிருத்தி, லாபம்  கிடைக்கும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். அன்னியோன்னியம் ஏற்படும். சுபகாரியங்கள் இனிதே  நடக்கும். ஹனுமனை வணங்கி எதையும் ஆரம்பித்தால் வெற்றிதான்.

அவிட்டம் 1 - 2ம் பாதங்கள்: தன லாபம், தன சேர்க்கை உங்களைத் தேடி வரும். தைரியமும் தன்னம்பிக்கை  சுடர்விடும். சோம்பலை விடுங்கள். பிரிந்த சொந்தங்கள் தேடிவரும். ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பெண்ணுக்கு நல்ல  வரன் கிடைக்கும். எதிர்பாராத பயணத்தில் அனுகூலம் உண்டாகும். ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்லுங்கள், நனமைகள்  தேடிவரும்.

பரிகாரம் : சனிதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீநடராஜரை வணங்கி வரவும். முடிந்தால்  தேங்காய் விளக்கு போடவும்.  சனிக்கிழமைதோறும் சிவன் கோவிலில் இருக்கும் அம்பாளுக்கு பிச்சிப் பூவை  அர்ப்பணித்து 3 முறை வலம் வரவும்.

------------------------------------------------------
கும்பம்

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:


அவிட்டம் 3 - 4: எதிலும் அவசரம் இருக்கும். எச்சரிக்கை தேவை. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம்  ஏற்பட்டாலும் செலவுகளும் முன் வந்து நிற்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஹனுமனை  வணங்கி எதையும் ஆரம்பித்தால் வெற்றி கிடைக்கும்.

ஸதயம்: பேசுவதைக் குறையுங்கள் பாதி பிரச்சனை தீர்ந்து விடும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டு நீங்கும்.  பண விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. திருமண முயற்சியில் வெற்றியடைவீர்கள். ஸ்ரீமஹாலக்ஷிமியை  வணங்குங்கள், தன முன்னேற்றம் ஏற்படும்.

பூரட்டாதி 1 - 2 - 3: உடல் நலத்தில் சற்று கவனமுடன் இருக்கவும். தந்தையாரின் உடல்நிலையில் கவனம் தேவை.  உத்தியோகம் பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளிடம் கவனமாக பழகவும். யாரையும் அனுசரித்து போனால் பிரச்சினை  இல்லை. மஹான்களை வழிபட தடைபட்டிருந்த காரியங்கள் தடை விலகி நன்மை ஏற்படும்.


பரிகாரம் : சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.  சனிக்கிழமைதோறும் வினாயகருக்கு மரிக்கொழுந்துவை அணிவித்து  வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை  படிப்படியாக  மூன்னேற்றம் ஏற்படும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


மீனம்:

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

பூரட்டாதி 4ம் பாதம் : உடல்நலம் உற்சாகமாக இருக்கும். அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்க வேகமும், விவேகமும்  அவசியமாகும். குடுமுறவில் மகிழ்ச்சி ஏற்படும். சிவபெருமானை வணங்கி எதையும் ஆரம்பித்தால் வெற்றிதான்.
உத்திரட்டாதி: ஆடை, ஆபரணம், அசையாசொத்து சேரும். உங்களுடைய வட்டாரம் பெரிதாகும். நண்பர்களால் அதிக  நன்மைகள் கிடைக்கும். திருமணம் மற்றும் சுபகாரியங்கள் தங்குதடையின்றி நடக்கும். ஸ்ரீமஹாவிஷ்ணுவை  வணங்குங்கள், நன்மைகள் பல கிடைக்கும்.

ரேவதி: வியாபாரம் பெருகும். மிகவும் தைரியமாக உபதொழில் ஒன்றும் ஆரம்பிப்பீர்கள். உத்தியோக ரீதியாக அயல்நாடு  செல்ல வேண்டி வரும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். முருகனை வணங்குங்கள், வாழ்வு சிறக்கும்.

பரிகாரம் : வியாழகிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவக்கிரகங்களை 9 முறை வலம்  வரவும். வியாழக்கிழமைதோறும் சாமந்தி மலரை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் தடைகளெல்லாம் விலகி  நன்மைகள் ஏற்படும்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திருப்பாவை தொடர் - பாகம் 1

திருப்பாவை பாசுரம் 1

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
     நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
     கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
     கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
     பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய்
 
 
 
பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.
 
நன்றி: தினமலர்

Wednesday, November 5, 2014

தமிழகத்திலேயே முதல் முறையாக உங்கள் கையால் சனிப்பெயர்ச்சி யாகம்

தமிழகத்திலேயே முதல் முறையாக உங்கள் கையால் சனிப்பெயர்ச்சி யாகம்

ஓம் கணபதி துணை - ஓம் குரு பகவான் துணை - ஓம் வேம்புலி அம்மன் துணை - ஓம் சனிபகவான் துணை

நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி - 16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபகவான் 
துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். 

அடுத்த இரண்டரை வருட காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார்.


உத்தம பலன் பெறும் ராசிகள்: கடகம், கன்னி, மீனம்

மத்யம பலம் பெறும் ராசிகள்: மிதுனம், மகரம், கும்பம்

அதம பலம் பெறும் ராசிகள்: மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு



இதில் அனைத்து ராசிக்காரர்களும் பரிகாரம் செய்யலாம்.

மேலும் மத்யம பலம் மற்றும் அதம பலம் பெறும் ராசிக்காரர்களும், லக்னக்காரர்களும் கட்டாயம் பரிகாரம் செய்ய வேண்டும். மேலும் சனி திசை, புத்தி, அந்தரம் நடப்பவர்கள் மற்றும் அசுபதி, பரணி, பூசம், விசாகம், அனுஷம், உத்திரட்டாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் ஆகிய நபர்களும் பரிகாரம் செய்யலாம். மற்றும் பிதுர் தோஷம் உள்ளவர்கள், சொத்து சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள், தொழில் முடக்கம், உத்தியோகத்தில் பிரச்சனை உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். திருமணத்தடை நீங்க, சந்தான பாக்கியம் பெற, லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்க கலந்து கொள்ளுங்கள்.   


இதற்குண்டான ஹோமம் பரிகாரம் 16-12-2014 அன்று குரோம்பேட்டை நெமிலிச்சேரி வேம்புலி அம்மன் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவேம்புலி அம்மன் ஆலயத்தில் நடைபெறுகிறது.  அன்று மஹாகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சனிப் பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பரிகார பூஜையும் நடைபெறுகிறது.


தமிழகத்திலேயே முதல் முறையாக உங்கள் கையால் ஹோமம் செய்யலாம்.


இதில் கலந்து கொள்ள ஒரு நபருக்குக் கட்டணம் ரூ.201/- மட்டும். ஒரு குடும்பத்திற்கு ரூ.501/- மட்டுமே. 

ஒவ்வொருவரும் தனித்தனியாக உட்கார்ந்து ஹோமம் செய்யலாம். பூஜைக்குத் தேவையான அனைத்து பொருட்களும் அங்கே வழங்கப்படும்.


பூஜை மற்றும் பரிகாரங்கள் நடத்தி வைப்பவர்:

தினமணி, தினகரன் மற்றும் ஞான ஆலயம் 
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்  





பூஜைக்குத் தேவையான விபரங்கள்:
அவரவர் பெயர், நக்ஷத்ரம், இராசி, கோத்திரம்[கிளை]
ஸங்கல்பம் (தாங்கள் குறிப்பிட வேண்டியது)
கல்வி
வேலைவாய்ப்பு
திருமணம்
குழந்தையின்மை
தீர்க்காயுள்

பிரசாத செட்: ரூ.501/-
[1] கும்ப செம்பு - 1
[2] தாங்கள் வீட்டில் தினமும் பூஜிக்கத்தக்க நவக்கிரக கணபதி படம் - 1
[3] சனி யந்திரம் - 1
[4] ஹோம ரக்ஷை
[5] ஹோம பிரசாத கயிறு
[6] ஹோமத்தில் இடப்பட்ட நாணயம் ஒன்று
[7] அக்ஷதை
[8] விபூதி
[9] குங்குமம்


மேலும் விபரங்களுக்கு:
7845119542    /    9444 22 82 82


Tuesday, September 16, 2014



புரட்டாசி மாத ஜோதிட - ஆன்மீகக் குறிப்புகள் 
பெரிய பதிவு



Monday, September 8, 2014

இன்றைய கோட்சார பொது பலன் - 08-09-2014

தின பலன்: 08-09-2014
திங்கட்கிழமை

பஞ்சாங்கம் - 08-09-2014

ஸ்ரீஜய வருஷம்
தக்ஷிணாயனம்
வர்ஷ ரிது
ஆவணி மாதம் 23ம் நாள்
இங்கிலீசு: 08-09-2014
திங்கட்கிழமை

Saturday, September 6, 2014

பஞ்சாங்கம் - 06-09-2014

ஸ்ரீஜய வருஷம்
தக்ஷிணாயனம்
வர்ஷ ரிது
ஆவணி மாதம் 21ம் நாள்
இங்கிலீசு: 06-09-2014
சனிக்கிழமை

Thursday, September 4, 2014

பஞ்சாங்கம் - 05-09-2014 - வெள்ளிக்கிழமை

ஸ்ரீஜய வருஷம்
தக்ஷிணாயனம்
வர்ஷ ரிது
ஆவணி மாதம் 20ம் நாள்
இங்கிலீசு: 05-09-2014
வெள்ளிகிழமை

Monday, September 1, 2014

2-9-2014 செவ்வாய் கிழமை ஸ்பெஷல் பதிவு:

2-9-2014 செவ்வாய் கிழமை ஸ்பெஷல் பதிவு:
குரு உச்சம்
சூரியன் ஆட்சி
புதன் ஆட்சி, உச்சம்
சனி வக்ர உச்சம்
செவ்வாய் ஆட்சி
சந்திரன் நீசம்

கிட்ட தட்ட 30 வருடங்களுக்குப் பின் நிகழும் ஓர் அரிய நிகழ்வு...
இதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும்... காத்திருங்கள்...

செப்டம்பர் மாத ஆன்மீகக் குறிப்புகள் - ராசிபலன்கள்

செப்டம்பர் மாத விசேஷங்கள்:


Sunday, August 31, 2014

பஞ்சாங்கம் - 01-09-2014

இன்றைய நாள் இனிய நாள்:

ஸ்ரீஜய வருஷம்
தக்ஷிணாயனம்
வர்ஷ ரிது
ஆவணி மாதம் 16ம் நாள்
இங்கிலீசு: 01-09-2014
திங்கட்கிழமை

Thursday, August 28, 2014

விநாயகர் சதுர்த்தி - ஸ்பெஷல் follow up

சந்தேக நிவர்த்தி:

மிதுன ராசிக்காரர்கள் - கருப்பு உளுந்தைப் பயன்படுத்தி சுண்டல் விநியோகம் செய்யவும்.


மகர ராசிக்காரர்கள் - தேங்காய் விளக்கிற்கு நெய் பயன்படுத்தவும்.

நன்றி.

விநாயகர் சதுர்த்தி - ஸ்பெஷல் - பாகம் இரண்டு - ஒலி வடிவில்

விநாயகர் சதுர்த்தி சார்ந்த வழிபாடு




ஒவ்வொரு ராசிக்குரிய பரிகாரம் - ஒலி வடிவில்

விநாயகர் சதுர்த்தி - மேஷம் to கன்னி




விநாயகர் சதுர்த்தி - துலாம் to மீனம்



விநாயகர் சதுர்த்தி - ஸ்பெஷல் பதிவு



ஆவணி மாதம் வரும் ’வளர்பிறை சதுர்த்தி' திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு அவரைக் கொண்டாடினால், நமக்கு எல்லா விதமான நன்மைகளும் விளையும்.

Saturday, August 23, 2014

நாமயோகங்கள்

திதிகள்

திதிகள்:
  1. பிரதமை
  2. துவிதியை
  3. திரிதியை
  4. சதுர்த்தி
  5. பஞ்சமி
  6. சஷ்டி
  7. ஸப்தமி
  8. அஷ்டமி
  9. நவமி
  10. தசமி
  11. ஏகாதசி
  12. துவாதசி
  13. திரயோதசி
  14. சதுர்த்தசி
  15. அமாவாசை
  16. பௌர்ணமி

எந்தெந்த திதிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் என்பதை பின்வரும் நாட்களில் பார்க்கலாம்.
தொடரும்....

இன்று மாஸ சிவராத்திரி

இன்று மாஸ சிவராத்திரி

இன்று ஆவணி மாத சிவராத்திரி. மிக அபூர்வமான நாள் என்று கூட சொல்லலாம்.




செப்டம்பர் மாத ராசிபலன்கள்

செப்டம்பர் மாத ராசிபலன்கள்

விரிவாகவும், தெளிவாகவும் 

விரைவில்

நவக்கிரகங்கள் - சூரியன் - பாகம் 2

சூர்ய பகவான் மந்திரங்கள்:

சுலோகம்:

ஓம் ஜபாகுசும சங்காசம் காச்யபேயம் மகாத்யுதிம்||
தமோரிம் சர்வ  பாபக்னம் ப்ரனதோஸ்மி  திவாகரம்||


மந்திரம்:  ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் சஹ சூர்யாய நமஹ||  

Surya Gayatri (Gayatri for Sun – Aditya Gayatri) சூரிய காயத்ரி

Om Aswadwajaya Vidhmahe Pasa Hasthaya Dheemahe Thanno Surya Prachodayath
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாஸஹஸ்தாய தீமஹி தன்னோ சூர்ய ப்ரசோதயாத்






Various other Surya Gayatri Mantras: ஏனைய சூர்ய காயத்ரி மந்திரங்கள்:

Om Bhaaskaraaya vidmahe Divaakaraaya dheemahi tanno Suryah prachodayat
ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

Om Bhaaskaraaya vidmahe Mahaaiyothischakraaya dheemahi tanno Suryah prachodayat
ஓம் பாஸ்கராய வித்மஹே மஹா ஜ்யோதிஸ்சக்ராய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

Om Bhaaskaraaya vidmahe mahaadyutikaraaya dheemahi tanno Aadityah prachodayat
ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்

Om Bhaaskaraaya vidmahe Mahaatejaaya dheemahi tannah Suryah prachodayat
ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாதேஜாய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

Om Aadiyaaya vidmahe Maarthaandaaya dheemahi tannah Suryah prachodayat
ஓம் ஆதித்யாய வித்மஹே மார்தாண்டாய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

Om leelaalaaya vidmahe mahaa dyutikaraaya dheemahi tanno Aaadityaaya prachodayat
ஓம் லாலீலாய வித்மஹே மஹா த்யுதிகராய தீமஹி தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்

Om prabhakaraaya vidmahe Mahaa dyutikaraaya dheemahi tanno Aadityaaya prachodayat
ஓம் பிரபாகராய வித்மஹே மஹா த்யுதிகராய தீமஹி தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்



சூரியனுக்குரிய அர்ச்சனை:

ஓம் அருணாய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் அசுயுதாய நம:
ஓம் விஸ்வரூபாய நம:
ஓம் பானவே நம:
ஓம் வஸவே நம:
ஓம் சரண்யாய நம:
ஓம் ஆதியூதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் இந்திராய நம:
ஓம் ஈசாய நம:
ஓம் வசுப்ரதாய நம:
 

27 நக்ஷத்ரங்கள்

நக்ஷத்ரம் என்பதை "நக்ஷ்" என்றும் "க்ஷேத்திரம்" என்றும் இரண்டு சொற்களாக பிரிக்கலாம்.

"நக்ஷ" என்றால் "ஆகாயம்", "க்ஷேத்திரம்" என்றால் "இடம்" என்று பொருள். எனவே நக்ஷத்ரம் என்றால் ஆகாயத்தில் ஒரு இடம் எனப்பொருள்படும்.

ஒரு குறிப்பிட்ட   நேரத்தில்  ஆகாயத்தில் சந்திரன் எந்த இடத்தில் நிற்கின்றாரோ அந்த இடத்தை நக்ஷத்ரம் எனக்குறிப்பிடுவது வழக்கம்.

            நட்சத்திர  மண்டலம் 27 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, அவைகளே 27 நட்சத்திரங்களாகும். 27  நட்சத்திரங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.

நட்சத்திரங்களின்  பெயர்கள்

1.அஸ்வினி     2. பரணி      3.கிருத்திகை    4.ரோஹிணி       5.மிருகசீரிடம்    6.திருவாதிரை    7.புனர்பூசம்        8.பூசம்         9.ஆயில்யம்  
       
10.மகம்               11.பூரம்              12.உத்திரம்        13.ஹஸ்தம்       14.சித்திரை       15.ஸ்வாதி           16.விசாகம்        17. அனுசம்         18. கேட்டை
               
19.மூலம்        20.பூராடம்       21.உத்திராடம்      22.திருவோணம்    23.அவிட்டம்    24.சதயம்       25.பூரட்டாதி     26.உத்திரட்டாதி     27. ரேவதி                    

12 ராசிகள்

துவாதச ராசிகள்





மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

நவக்கிரகங்கள்




சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்கிரன்
சனி
ராகு
கேது


நவக்கிரக துதி:

ஓம் ஆதித்யாய சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யைச ராகுவே கேது நம


வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் 
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!


நவக்கிரகங்கள் - சூரியன் - பாகம் 1

சூரியன் ஆண் கிரகம்
குலம் சத்திரியன்
இருக்கை வட்ட வடிவம்
அம்சம் சிவன்
நிறம் சிவப்பு
வாகனம் மயில், தேர்
பஞ்சபூதம் நெருப்பு
திசை கிழக்கு
ஆடை சிவந்த ஆடை
குணம் சத்வ குணம்
தானியம் கோதுமை
சமித்து எருக்கு
மலர் செந்தாமரை
நவரத்தினம் மாணிக்கம்
உலோகம் தாமிரம்
ராசி ஸ்திரராசி
ஆட்சி ராசி சிம்மம்
உச்ச ராசி மேஷம்
நீச ராசி துலாம்
நட்பு ராசி விருச்சிகம், தனுசு, மீனம்
பகை ராசி ரிஷபம், மகரம், கும்பம்
சம ராசி மிதுனம், கடகம், கன்னி
கிரகத்தின் தன்மை குரூரம்
நட்பு கிரகங்கள் சந்திரன், செவ்வாய், குரு
பகை கிரகங்கள் சந்திரன், சனி, ராகு
காரகன் பிதுர்க்காரகன்(தந்தை), ஆத்மகாரகன்
சூரிய சார நட்சத்திரங்கள் கிருத்திகை, உத்திரம், உத்திராடம்
பார்வை ஏழாம் பார்வை
மூலத்திரிகோண ராசி சிம்மம்
சூரிய திசை ஆறு ஆண்டுகள்

Thursday, August 21, 2014

Friday, August 8, 2014

அறிவிப்பு

அடுத்த கடினமான நிகழ்ச்சி நிரல் ஆரம்பம்

9ம் தேதி - சனிக்கிழமை - தூத்துக்குடி பயணம்

10ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை - தலை ஆவணி அவிட்டம் - அம்மா அப்பாவுடன் - தூத்துக்குடி ஸ்பிக்நகரில்

11ம் தேதி - திங்கட்கிழமை - சொந்த ஊர் பெருங்குளம் - காலை சாஸ்தாவிற்கு அபிஷேக ஆராதனை - மாலை பெருமாளுக்கு பூ சட்டை அணிவித்து ஆராதனை

12ம் தேதி - செவ்வாய்கிழமை - பெருங்குளம் பத்ரகாளி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை

13ம் தேதி - புதன்கிழமை - திருச்செந்தலதிபன் கோவிலில் பூஜை

14ம் தேதி - வியாழன் - கும்பகோணம் பயணம்

15ம் தேதி & 16ம் தேதி - வெள்ளி & சனிக்கிழமை - பெரியோர்களின் ஆசீர்வாதத்தால் எமது தலைமையில் 6வது பிரஸ்ண வகுப்பு

17ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை - சென்னை பயணம்

18ம் தேதி - திங்கட்கிழமை - சென்னையில் ஓய்வு

19ம் தேதி - செவ்வாய்கிழ்மை - கும்பகோணத்தில் உள்ள ஒரு தொலைக்காட்சி நேர்காணல்

20ம் தேதி - புதன்கிழமை - கும்பகோணம் மக்களுக்கு ஜோதிட ஆலோசனை

21ம் தேதி வியாழக்கிழமை - சென்னை திரும்புதல்

சுபம்.

Sunday, July 27, 2014

டாஸ்மாக் - தாலி

நேற்று இரவு கிட்டத்தட்ட மணி 10.15 இருக்கும்.

இடம்: அம்பத்தூர் - வானகரம் ரோடு

நான் வானகரத்திலிருந்து வந்து கொண்டிருந்தேன்.

எதிரில் ஒரு ஆட்டோ, அதன் பின் 2 வீலரில் ஒரு குடும்பம் (3 வயது குழந்தையுடன்), அதன் பின் விபத்து ஏற்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட பல்சர் வாகனத்தில் ஒரு நபர் வந்து கொண்டிருந்தார்கள்.

பல்சர் எகிறி முன் சென்று கொண்டிருந்த வாகனத்தில் மீது மோத, அந்த வாகனம் ஆட்டோவின் மீது விழ ஆட்டோ கவிழ்ந்து விழுந்தது. பல்சர் மற்றும் அந்த இரு சக்கர வாகனங்களும் கிட்டத்தட்ட 20 அடிகள் உரசியே விழுந்தது. அந்த குடும்பத்தை சார்ந்த கணவன், மனைவி மற்றும் குழந்தைக்கு அடி. கணவருக்கு செக் பண்ணினேன், இடது கால் முட்டி விலகியிருந்தது, அவரால் நிற்க முடியவில்லை, மனைவிக்கு இடது பக்கம் உள்ள சேலை முழுவதும் கிழந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. நல்லவேளை குழந்தைக்கு ஏதும் ஆகவில்லை.

உடனடியாக போலீசுக்கும், 108க்கும் போன் செய்து வரவழைத்தேன். கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு யாரும் வரவில்லை. அதன்பின் கூட்டம் கூடியது. பார்த்தால் ஆட்டோகாரரும், பல்சர் நபரும் நல்ல டாஸ்மாக் குடிமகன்கள்.

டேய் டாஸ்மாக், இன்னும் எத்தனை பேர் தாலிய அறுக்கப்போறீங்களோ?

Tuesday, July 15, 2014

ஆடி மாத ஜோதிட ஆன்மீகக் குறிப்புகள்




ஆடி மாத சிறப்பு:





அம்மனுக்கு உரிய மாதம் ஆடி மாதம். பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி  வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும். 


ஜோதிடப்படி கடகம் ராசிக்கு அதிபதி சந்திரன், சந்திரனுடைய அதிதேவதை அம்மன். இப்படிப்பட்ட கடக ராசியில் சூரியன் இருக்கும் மாதமே ஆடி மாதமாகும். அதனால்தான் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும்.

மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகை களைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்த மானவை. கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும்.



---------------------------------------------------------







ஆடி மாத குறிப்புகள்


தமிழ் தேதி
ஆங்கில தேதி
குறிப்புகள்
1
17-07-14
க்ருஷ்ணபக்ஷ ஷஷ்டி
5
21-07-14
ஆடி க்ருத்திகை
6
22-07-14
க்ருஷ்ணபக்ஷ சர்வ ஏகாதசி
8
24-07-14
க்ருஷ்ணபக்ஷ மஹாப்ரதோஷம்
10
26-07-14
ஆடி மாச சர்வ அமவாஸ்யை
14
30-07-14
சுக்லபக்ஷ சதூர்த்தி, ஆடிப்பூரம்
16
01-08-14
சுக்லபக்ஷ ஷஷ்டி
17
02-08-14
ஷஷ்டி வ்ரதம்
18
03-08-14
ஆடிப்பெருக்கு
19
04-08-14
குரு உதயம்
22
07-08-14
சுக்லபக்ஷ சர்வ ஏகாதசி
23
08-08-14
சுக்லபக்ஷ மஹாப்ரதோஷம், வ்ரலஷ்மீ வ்ரதம்
25
10-08-14
பௌர்ணமி, ச்ரவண வ்ரதம்
26
11-08-14
காயத்ரி ஜபம்
28
13-08-14
க்ருஷ்ணபக்ஷ மஹா சதூர்த்தி
30
15-08-14
க்ருஷ்ணபக்ஷ ஷஷ்டி
31
16-08-14
ஷஷ்டி வ்ரதம்


கிரஹ பாதசார விபரங்கள்:


சூர்யன்
2014
ஆடி
ம. நி
நக்ஷ்த்ரம்-பாதம்
20/7
4
மா.           4.39
பூசம் – 1
23/7
7
மறு. கா      4.52
பூசம்- 2
27/7
11
மா.           5.06
பூசம் – 3
30/7
14
மறு. கா      5.19
பூசம் - 4
3/8
18
மா.           5.21
ஆயில்யம் – 1
6/8
21
மறு. கா      5.07
ஆயில்யம் – 2
10/8
25
மா.           4.54
ஆயில்யம் – 3
13/8
28
மறு. கா     4.26
ஆயில்யம் – 4




சந்திரன்
2014
ஆடி
ம. நி
ராசி
19/7
3
 கா. 9.40
மேஷம்
21/7
5
மா. 3.22
ரிஷபம்
23/7
7
இ. 11.31
மிதுனம்
26/7
10
கா. 9.57
கடகம்
28/7
12
இ. 9.38
சிம்மம்
31/7
15
கா. 8.53
கன்னி
2/8
17
மா. 6.18
துலாம்
4/8
19
இ. 1.16
வ்ருச்சிகம்
6/8
21
மறு. கா. 6.00
தனுசு
9/8
24
கா. 9.06
மகரம்
11/8
26
ப. 11.29
கும்பம்
13/8
28
ப. 2.02
மீனம்
15/8
30
மா. 5.39
மேஷம்





செவ்வாய்
2014
ஆடி
ம. நி
நக்ஷ்த்ரம்-பாதம்
20/7
4
இ. 11.37
சித்திரை – 4
26/7
10
இ. 1.06
சுவாதி – 1
1/8
16
மா. 6.04
சுவாதி – 2
6/8
21
மறு. கா. 3.48
சுவாதி – 3
12/8
27
ப 1.32
சுவாதி – 4




புதன்
2014
ஆடி
ம. நி
நக்ஷ்த்ரம்-பாதம்
17/7
1
இ. 7.01
புனர் பூசம் - 1
19/7
3
இ. 7.22
புனர் பூசம் - 2
21/7
5
மா. 6.07
புனர் பூசம் - 3
23/7
7
மா. 3.00
புனர் பூசம் - 4
25/7
9
ப.11.52
பூசம் – 1
27/7
11
கா. 8.44
பூசம்- 2
28/7
12
மறு. கா. 5.26
பூசம் – 3
30/7
14
இ. 1.22
பூசம் - 4
1/8
16
இ. 9.17
ஆயில்யம் – 1
3/8
18
மா. 5.12
ஆயில்யம் – 2
5/8
20
ப. 1.12
ஆயில்யம் – 3
7/8
22
கா. 8.44
ஆயில்யம் – 4
8/8
23
மறு. கா. 4.17
மகம் - 1
10/8
25
இ. 11.49
மகம் - 2
12/8
27
இ. 7.22
மகம் - 3
14/8
29
மா. 4.01
மகம் - 4
16/8
31
ப. 2.24
பூரம் - 1




குரு
2014
ஆடி
ம. நி
நக்ஷ்த்ரம்-பாதம்
28/7
12
இ. 12.15
பூசம் – 3
12/8
27
இ. 8.36
பூசம் - 4



சுக்ரன்
2014
ஆடி
ம. நி
நக்ஷ்த்ரம்-பாதம்
17/7
1
கா. 7.42
ம்ருகச்சீர் - 4
19/7
3
இ. 1.40
திருவா. - 1
22/7
6
இ. 7.39
திருவா. – 2
25/7
9
ப. 1.38
திருவா. – 3
28/7
12
கா. 7.37
திருவா. - 4
30/7
14
இ. 1.35
புனர் பூசம் - 1
2/8
17
இ. 7.33
புனர் பூசம் - 2
5/8
20
ப. 1.31
புனர் பூசம் - 3
8/8
23
கா. 7.29
புனர் பூசம் - 4
10/8
25
இ. 1.27
பூசம் – 1
13/8
28
இ. 7.25
பூசம் – 2
16/8
31
ப. 1.16
பூசம் – 3



சனி
2014
ஆடி
ம. நி
நக்ஷ்த்ரம்-பாதம்

1
17.07
சுவாதி – 4

2
18.07
விசாகம் - 1



ராகு - சித்திரை – 2
கேது – ரேவதி - 4

நாயன்மார் திருநக்ஷ்த்ரங்கள்

ஆங்கிலம்
தமிழ்
திருநக்ஷத்ரம்
21/7
5
மூர்த்தி நாயனார், புகழ்சோழ நாயனார்
25/07
9
கூற்றுவ நாயனார்
28/07
12
பெருமிழலை குறும்ப நாயனார்
03/08
18
ஸ்ரீசுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், சேரமான்மாபெருமாள் நாயனார்
16/08
31
கலியநாயனார், கோட்புலி நாயனார்

அடிவருள் ஏனையர்

ஆங்கிலம்
தமிழ்
திருநக்ஷத்ரம்
09/08
24
பட்டினத்தார்


ஆழ்வார் ஆச்சாரியர்:

ஆங்கிலம்
தமிழ்
திருநக்ஷத்ரம்
23/07
7
22வது பட்டம்
27/07
11
பிரதிவாதி பயங்கர மன்னன்  36வது பட்டம்
30/07
14
26வது பட்டம், கந்தாடை தோழப்பர் (ஸ்ரீஆண்டாள்)
01/08
16
பத்ரிநாராயணர்
03/08
18
பரத்வாஜ ஸ்ரீனிவாஸ ஜீயர், பக்ஷிராஜர் (பெரிய திருவடி), 25வது பட்டம்
09/08
24
ஸ்ரீஆளவந்தார், புண்டரீகாக்ஷர், 14வது பட்டம்
10/08
25
தேக்காழ்வார்


மத்வாச்சாரியார்:

ஆங்கிலம்
தமிழ்
திருநக்ஷத்ரம்
24/07
8
ஸ்ரீவிஜயேந்திரர்
02/08
17
சத்யவரதர்
12/08
27
ஸ்ரீராகவேந்திரர்


வாஸ்து பகவான் நித்திரை எழுதல்:
27-07-2014 – ஆடி 11 – ஞாயிறு – காலை 6.48  -  8.18 வரை
நல்ல நேரம்: காலை மணி 07.42 – 08.18க்குள்

கிரகநிலை:






ஆடி மாத ராசிபலன்கள்:

மேஷம்
(அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்øடை பெறும் மேஷராசியினரே இந்த மாதம் இறுதியில் எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். ஆறாமிடத்தில் உள்ள ராகு சஞ்சாரம் வயிறு கோளாறை ஏற்படுத்தும். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும்.  புதிய நபர்களின்  நட்பு உண்டாகும். வீடு வாகனம்  தொடர்பான விஷயங்களில்  கூடுதல் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும். 

சந்திராஷ்டமம்: 19ம் தேதி (04-08-2014) திங்கள் இரவு 1.16 முதல் 22ம் தேதி (07-08-2014) வியாழன் அதிகாலை 5.59 வரை

பரிகாரம்: செவ்வாய்கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ பயம் விலகும்.


---------------------------------------------------------



ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

எல்லோரிடமும் அனுசரித்து பேசும் குணமுடைய ரிஷப ராசியினரே இந்த மாதம்  பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல்  நீங்கும்.
தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். பெண்களுக்கு எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில்  வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்:  ஆடி 22ம் தேதி (07-08-2014)  வியாழன் அதிகாலை 6.00 முதல் 26ம் தேதி (09-08-2014) சனி காலை 09.05 வரை

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வணங்கிவர செல்வம் சேரும். 


---------------------------------------------------------




மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

நேரத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செயல்படும் மிதுன ராசியினரே இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. மனகஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மாத மத்தியில் மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே  விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். பெண்களுக்கு  மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம்.

சந்திராஷ்டமம்:  ஆடி 24ம் தேதி (09-08-2014) சனி காலை 9.06 முதல் 26ம் தேதி (11.08.2014) திங்கள் பகல் 11.28 வரை

பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.


---------------------------------------------------------




கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

உயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிப்பதே குறிக்கோளாக உடைய கடக ராசியினரே இந்த மாதம் பணவரத்து இருக்கும். மனகவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும்.  புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். 
குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.  கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடைநீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு  கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

சந்திராஷ்டமம்:  ஆடி 26ம் தேதி (11.08.2014) திங்கள் பகல் 11.29 முதல் 28ம் தேதி (13.08.2014) புதன் பகல் 2.01 மணி வரை

பரிகாரம்:  திங்கள்தோறூம் அம்மனை நெய் விளக்கு ஏற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும்.


---------------------------------------------------------




சிம்மம்
(மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் உடைய சிம்ம ராசியினரே இந்த மாதம் பணதேவை அதிகரிக்கும். வீண் செலவு மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம் உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும்.  வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பெண்களுக்கு  மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். 
மாணவர்களுக்கு  பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. 

சந்திராஷ்டமம்:  ஆடி 28ம் தேதி (13.08.2014) புதன் பகல் 02.02 முதல்30ம் தேதி ()15.08.2014 வெள்ளி மாலை 5.38 வரை

பரிகாரம்:  பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவனையும் வணங்க எல்லா இடையூறும் விலகும். முற்பிறவி பாவம் நீங்கும்.


---------------------------------------------------------




கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

தர்மகுணமும், இரக்க சிந்தனையும் உடைய கன்னி ராசியினரே, இந்த மாதம் எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில்  சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள். பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம்:  ஆடி 30 (15.08.2014) வெள்ளி 5.39 முதல் ஆவணி 1ம் தேதி 17.08.2014 ஞாயிறு இரவு 11.06 வரை

பரிகாரம்:  ஸ்ரீஐயப்பனை வணங்கிவர  எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்ப்புகள் அகலும்.



---------------------------------------------------------




துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

ஆடை ஆபரணத்தையும் அலங்காரத்தையும் விரும்பும் துலா ராசியினரே இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான  காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும்.  புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். 
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். பெண்களுக்கு  எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம்:  ஆடி 5ம் தேதி (21.07.2014) திங்கள் மாலை 03.22 முதல் 7ம் தேதி (23.07.2014) புதன் இரவு 11.30 வரை

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறூம் அம்மனை வணங்கி வர குடும்ப பிரச்சனை தீரும். காரிய தடை விலகும்.


---------------------------------------------------------




விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

சோர்வில்லாமல் எப்போதும் உற்சாகமாக காணப்படும் விருச்சிக ராசியினரே இந்த மாதம் உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும்.  வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும்.  சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில்  கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில்  வெற்றி வாய்ப்பு உண்டாகும். 

சந்திராஷ்டமம்:   ஆடி 7ம் தேதி (23.07.2014)  புதன் இரவு 11.31 முதல் 10ம் தேதி (26.07.2014) சனி காலை 09.56 வரை

பரிகாரம்:  ஞாயிற்றுகிழமையில் மாரியம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட காரிய தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். 


---------------------------------------------------------




தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

எந்த ஒரு காரியத்திலும் லாபநஷ்டம் பார்க்கும் குணமுடைய தனுசு ராசியினரே இந்த மாதம் விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனகுழப்பம் உண்டாகலாம். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.  அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம்.  பணவரத்து இருக்கும்.  பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது  கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். மாணவர்களுக்கு யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். 

சந்திராஷ்டமம்:   ஆடி 10ம் தேதி (26.07.2014) சனி காலை 09.57 முதல் 12ம் தேதி (28.07.2014) திங்கள் இரவு 09.37 வரை

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவனை வணங்கி வர மனஅமைதி உண்டாகும். எல்லோரும் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள்.


---------------------------------------------------------




மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

திடபுத்தியும், பலவழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறமையும் கொண்ட மகரராசியினரே இந்த மாதம் பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். மாத மத்தியில் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி  கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம்.

சந்திராஷ்டமம்: ஆடி 12ம் தேதி (28.07.2014) திங்கள் இரவு 09.38 முதல் 15ம் தேதி (31.07.2014) வியாழன் காலை 08.52 வரை

பரிகாரம்:  விநாயகபெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க காரிய தடைகள் விலகி அனுகூலமான பலன் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.  


---------------------------------------------------------




கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

இருதரப்பு வாதங்களையும் கேட்டு அதன்பிறகே நியாயத்தை சொல்லும் குணமுடைய கும்பராசியினரே, இந்த மாதம் எதிர்ப்புகள் நீங்கும். நோய்களை நீக்கி உடல் ஆரோக்கியத்தை தரும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். 
பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும். 
மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும்.  

சந்திராஷ்டமம்:  ஆடி 15ம் தேதி (31.07.2014) வியாழன் காலை 8.53 முதல் 17ம் தேதி (02.08.2014) சனி மாலை 06.17 வரை

பரிகாரம்:  சனீஸ்வர பகவானுக்கு சனிக்கிழமையில் நல்லெண்ணை தீபம் ஏற்றுவதும் உடல் ஆரோக்கியத்தை தரும். குடும்ப பிரச்சனை தீரும்.



---------------------------------------------------------




மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

பிரச்சனை என்று வரும் போது அதில் சிக்காமல் சாமர்த்தியமாக நழுவும் திறமை உடைய மீனராசியினரே, இந்த மாதம் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன்  வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல்  இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும். 
பெண்களுக்கு உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது.  
மாணவர்களுக்கு  எவ்வளவு திறமையாக படித்தாலும்பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும். 

சந்திராஷ்டமம்: ஆடி 17ம் தேதி (02.08.2014) சனி மாலை 06.18 முதல் 19ம் தேதி (04.08.2014) திங்கள் இரவு 1.15 வரை

பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானை முல்லை மலர் சாற்றி, நெய்தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். 



---------------------------------------------------------