Monday, June 12, 2017

ஊரின் வாஸ்து - தொகுப்பு பதினொன்று



ஊரின் வாஸ்து - தொகுப்பு பதினொன்று

குடி மக்கள் வழிபாடு:
ஒவ்வொரு சாதியினராக இருந்தாலும் ஒவ்வொரு சாதிக்குள்ளும் பல்வேறு குடிமக்கள் கோவில்கள் இருந்தது - இருக்கின்றது.

உதாரணமாக அந்தணர் சாதியினரில் வேதம் சொல்லும் வேதியர்களுக்கு அம்மன் சம்பந்தப்பட்ட தேவதையோ - கணியர் குழுவினருக்கு அய்யனார் தேவதையோ - பார்ப்பனர் குழுவினருக்கு முருகனோ இருக்கலாம். இந்த குடிமக்கள் தேவதைகள் அனைத்தும் ஊரின் பிரதான தேவதைக்கு கட்டுப்பட்டு இருக்கும். 

குறிப்பு: கணியர் வம்சத்தில் வந்த எங்கள் குடும்பத்திற்கு அய்யனார் குல தெய்வம்.

இதே போன்று ஊரில் அனைத்து சாதியினருக்கும் சேர்த்து கூடுமானவரை 64 தெய்வங்கள் இருக்கும். ஒவ்வொரு திசையிலும் 8 தெய்வங்கள் வீதம் 8 திசைகளுக்கு எட்டு தெய்வங்கள் இருக்கும். ஊரின் பிரதான கோவிலுக்கு 100 அடி வரை இந்த குடி மக்கள் கோவில் இருக்காது. பின்னாட்களில் பிரதான கோவிலில் அருகிலேயே இந்த குடிமக்கள் கோவில் கொண்டு வரப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் இந்த குடிமக்கள் வழிபாடு சுருங்கி விட்டது எனலாம். 




ஒவ்வொரு திசையில் இருக்கும் எட்டு குடிமக்கள் கோவிலிலும் மிகச் சிறந்த சக்தி வெளிப்படும். ஒரு குழுவினர் இன்னோரு குழுவினரின் குடிமக்கள் கோவிலுக்குச் செல்ல மாட்டார்கள். பிரசாதம் உட்கொள்ள மாட்டார்கள். ஏதேனும் வேண்டுதல் இருந்தால் எடுத்துக்காட்டாக மழை வேண்டி பிரார்த்தனை இருந்தால் வருண மூலையில் இருக்கும் குடிமக்கள் கோவில்கள் சிறப்பு வழிபாடு செய்வார்கள். அந்த ஊரில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் அக்னி மூலையில் இருக்கும் குடிமக்கள் கோவிலில் பிரார்த்தனை செய்வார்கள். அடிக்கடி துர் மரணம் சம்பவித்தால் எம திசையில் இருக்கும் குடிமக்கள் கோவில்களில் சிறப்பு வேண்டுதல்கள் செய்வார்கள். 

குடிமக்கள் வழிபாடு இன்றும் சேர நாட்டில் பல இடங்களிலும் - கொங்கு நாட்டில் சில இடங்களிலும் இருப்பதை கண் கூடாக பார்க்க இயலும். 

திருநெல்வேலி பகுதியில் இன்றும் இருக்கும் குடிமக்கள் வழிபாட்டில் இருக்கும் சில தெய்வங்கள்: தென்னை மரத்தடியான் - வாய்க்கான் கரையான் - கரடி சாமி - சிரசாமி - உள்ளப்பன் - அருதப்பன் - மருதப்பன் - சோலையான் - குளக்கரை சாமி - பேச்சியம்மன் - வண்டிமலைச்சி - புள்ளச்சி - சரிச்சி, இன்னும் பல.

வேண்டிய பலன்கள் உடனே நடைபெறுவதற்கு..... அடுத்த பதிவில் தொடரும்...

No comments: