Monday, August 28, 2017

ஸ்ரீமான் நந்தன் நீலகேனி - இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாகம் சாராத தலைவரின் ஜாதகம்

சில நாட்களாக இறங்குமுகமாக இருந்து வந்த இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த 18 ஆகஸ்ட் - வெள்ளிக்கிழமை அன்று விர்ரென்று ஏறுமுகம் கண்டன.




இதற்கு சொல்லப்பட்ட காரணம் ஸ்ரீமான் நந்தன் நீலகேனி அவர்கள் மீண்டும் இந்த நிறுவனத்திற்கு  நிர்வாகம் அல்லாத நியமிக்கப்படுவார் என்று வந்த செய்தி.

திரு.நந்தன் நீலகேனி அவர்கள் கடந்த 24ம் தேதி மீண்டும் பதவி ஏற்றார்.




திரு.நந்தன் நீலகேனி அவர்கள் 2 ஜூன் 1955 அன்று பிறந்தார்.

அவருடைய நக்ஷத்ரம் ஸ்வாதி - துலா ராசி - சிம்ம லக்னம்.

ஜாதகப்படி தற்போது புதன் திசை - சனி புத்தி நடந்து வருகிறது. கேது திசை 2018ம் ஆண்டு அக்டோபர் 20 அன்று பிறக்கிறது.


ஜாதகத்திலுள்ள பலம்:
சூரியன் - குரு - சுக்கிரன் - சனி ஆகிய கிரகங்கள் இவரது ஜாதகத்தில் பலம் வாய்ந்த கிரகங்களாக இருக்கிறது.

பத்தாம் இடத்தில் இருக்கும் லக்னாதிபதி சூரியனால் அரசாங்கம் சார்ந்த விஷயங்களில் இவரை அரசு பயன்படுத்திக் கொள்ளும். இவர் போட்டுக் கொடுத்த கோட்டில்தான் தற்போது ஆதார் எடுக்கும் பணி இயங்கி வருகிறது. மேலும் இவரது ஜாதகத்தில் குரு மிக பலமாக இருப்பதால் அரசாங்கத்தில் இருக்கும் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் இவருக்கு நெருக்கமாக இருப்பார்கள். சுக்கிரன் பலமாக இருக்கும் காரணத்தினால் இவருக்கு அமைந்த மனைவியின் மூலம் மிக அதிகமான அதிர்ஷ்டங்களைப் பெற்றார். சனி பலமாக இருப்பதால் மதியூகம் இவருக்கு அதிகம். சந்திரன் சுக்கிரன் சம சப்தம பார்வை இருப்பதால் இவருக்கு Face Value அதிகம்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயம்:
இவரது ஜாதகப்படி வரப்போகும் கேது திசையில் இவர் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் 2019 பிப்ரவரி முதல் ஒன்றரை வருட காலத்திற்கு மிக அதிகமான சோதனைகளை இவர் சந்திக்க வேண்டி வரலாம்.

குறிப்பு:
இவரது ஜாதகமானது இணையத்தில் இருக்கும் இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டது. எனவே ஜாதகம் துல்லியமாக இருக்கும் என்று உறுதியளிக்கப்படவில்லை.



பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com
Web: www.kuppuastro.com

No comments: