Tuesday, September 12, 2017

தேவ ப்ரஸ்ணம்: தொடர் பகுதி - 04:

தேவ ப்ரஸ்ணம்: தொடர் பகுதி - 04:
ஸ்வாமிக்கு ப்ரஸ்ணம் பார்க்கும் போது வந்திருக்கும் லக்னத்திற்கு ஒன்பதாமிடம் என்று சொல்லக்கூடிய பாக்கியஸ்தானத்தை வைத்துதான் கோவிலின் நிர்வாகஸ்தர்கள் - கோவிலின் புண்ணிய பலம் - புண்ணியகாரியங்கள் ஆகியவற்றை சொல்ல முடியும். 


பொதுவில் ஜாதகம் பார்க்கும் போது ஒன்பதாமிடம் பாக்கியஸ்தானம் என்று அழைக்கப்படும். இந்த இடத்தை வைத்துத்தான் தந்தையாரைப் பற்றி சொல்ல முடியும். மேலும் காரகத்துவ அடிப்படையில் சூரியனை வைத்தும்  தந்தையாரைச் சொல்லலாம். தேவ ப்ரஸ்னத்தில் ஒரு கோவிலுக்கு தந்தையார் என்பவர் நிர்வாக தலைவராகவோ அல்லது தர்மகர்த்தாவாகவோ இருப்பார். சில காலங்கள் முன்பு வரை ஊரில் வசதியாக இருக்கும் நபரை கோவிலில் முன்னிலைப்படுத்துவார்கள். எனவே அவர் கோவிலிருந்து எதையும் அபகரிக்க மாட்டார். இறைபணியை சேவையாக செய்தார்கள். கோவிலினுடைய தேவதைக்குப் பயந்தார்கள். 




பிற்காலங்களில் இந்த முறை மாறியது. அரசாங்கம் உள் நுழைந்தது. அரசியல் விளையாட்டில் 5 வருடத்திற்கு ஒரு முறை அரசாங்கம் மாறுவது போல் நிர்வாகக் குழுவும் மாறியது. கோவிலினுடைய சாந்நித்யம் கெட்டது. கோவிலுக்கு வேண்டாதவர்கள் நிர்வாகத்தில் நுழைந்தார்கள். கோவிலினுடைய தேவதையை கல்லாகப் பார்த்தார்கள். பயமோ மரியாதையோ இல்லை. அந்த காலங்களில் அரசாங்கம் கோவிலில் நுழையாது.

இன்று நாம் ப்ரஸ்ணம் பார்க்கும் கோவில்களில் பாதி கோவில்களில் பாக்கியஸ்தானம் கெட்டுப் போய் இருக்கிறது. 

கடைசியில் கோவில் வழிபடும் இடம் என்பதைத் தாண்டி - கோவில் கார்ப்பரேட்களின் கையில் சிக்கித் தவிக்கிறது.

குறிப்பு: உடனே கோவில் பூஜை செய்பவர்களை பற்றி எழுதவில்லையே என்று அங்கலாய்க்க வேண்டாம். இந்த தொடரில் அதுவும் வரும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com
Web: www.kuppuastro.com

தொடரும்.....

No comments: