Tuesday, January 16, 2018

தினபலன்: 16-01-2018 செவ்வாய்கிழமை


தினபலன்: 16-01-2018
செவ்வாய்கிழமை


மேஷம்:
இன்று சில சோதனைகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அன்றாடப் பணிகளில் சோதனை உண்டாகாது. வியாபாரிகளுக்கு அளவான லாபம் கிடைக்கும். சிறு சோதனை ஏற்படலாம். வீடு, நிலம், போன்றவற்றில் ஆதாயப் போக்கு உண்டு. 
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7


ரிஷபம்:
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபட நன்மை  உண்டு. மனத்தில் ஒரு குழப்பம் இருக்கலாம். பொருளாதார நிலையில் சரிவு ஏற்படலாம். கலைத்துறையில் பாதிப்பு ஏற்படாது. நலம் உண்டாக தெய்வ வழிபாடு அவசியம். உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7


மிதுனம்:
இன்று அவசியமிருந்தாலன்றி பயணத்தை மேற்கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு அளவான லாபம் கிடைக்கும். பொறியியல், விஞ்ஞானம், கணிதம் போன்ற துறைகளில் உள்ளோர் மாமுல் பணிவர செய்து வந்தாலே பெரிய விஷயம். பெரியோர் ஆசியை விரும்பிப் பெறுவீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9


கடகம்:
இன்று குடும்ப நலம் சீராகும். பலவிதமான சோதனைகளுக்கு இலக்காக வேண்டிய நிலை தான். எளியவர்களுக்கு பலவிதமான உதவியை செய்யுங்கள். எந்தச் சங்கடத்தையும் சமாளிக்கும் திறமை இருந்து வரும். லாபம் தடைபடாது. குடுமப நலம் தாம்பத்திய சுகம் சீராக இருக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3


சிம்மம்:
இன்று பொதுவாக அன்றாட பணிகள் சீராக நடக்கும். உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. குடும்பத்தில் நற்காரியம் ஒன்று நடக்கலாம். உழைப்பாளிகளுக்கு நல்ல ஏற்றம் ஏற்படும். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6


கன்னி:
இன்று பயணத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். உங்களுடைய அந்தஸ்துக்குச் சோதனை வராது. குடும்பத்தில் சச்சரவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பங்காளிகளிடம் ஒத்துப் போவது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6



துலாம்:
இன்று அறிஞர்களுக்கு ஆதாய நிலை உருவாகும். தொழிலாளி முதலாளி உறவு பலப்படும். குடும்பத்தில் சுமூக நிலை கெட இடம் அளிக்க வேண்டாம். பத்திரிகை துறை போன்றவற்றில் ஓர் ஒளி உண்டாக வேண்டும். நல்ல விஷயங்களை பெரியோர் நல்லாசியுடன் அதைச் செய்யுங்கள். 
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7


விருச்சிகம்:
இன்று வியாபாரிகளுக்குப் பாதிப்பு இல்லை. துன்பங்களுக்கு எளிய பரிகாரம் செய்யுங்கள். பெண்கள் ஆண்களிடத்தில் பழகும் போது எச்சரிக்கையாக இருந்தாலொழிய அவப்பெயர் வந்து சேரும்.தொழிலாளிகள் தங்களது இயந்திரங்களில் பணியாற்றும் போது கவனமாகப் பணியாற்றுவது அவசியம். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5


தனுசு:
இன்று கௌரவம் சீராக இருக்கும்.  பணத் தட்டுப்பாடு இருக்காது. பொதுவாக அன்றாடப் பணிகள் சரிவர நடக்கும். நண்பர்கள் விசயத்தில் எச்சரிக்கையுடன் பழகுவது அவசியம். கலைத்துறைப் பணிகள் சுறுசுறுப்படையும். வியாபாரிகளுக்கு முதலுக்கு மோசம் ஏற்படாது. 
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9



மகரம்:
இன்று உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். விவசாயிகளுக்கு விசேஷமாக அமையும். காவல் துறையினருக்கு கௌரவம் கிட்டும். மனோதிடம் ஏற்படும். தருமப்பணிகளில் ஈடுபடுங்கள். அன்றாடக் கடமைகளை மட்டும் செவ்வனே செய்யுங்கள். புதுக் காரியங்களை சிறிது நாட்கள் காத்திருந்து தொடங்குவது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9



கும்பம்:
இன்று எந்த பிரச்சனையானாலும் நேர்மையான விதத்தில் கையாளுங்கள். பொருளாதார நிலையில் அபிவிருத்தி உண்டாகும். நற்காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை.அரசு விவகாரியங்களில் மேன்மை ஏற்படும். தொல்லைகள் நீங்கி நன்மைகள் ஏற்பட வாய்ப்புண்டு. 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9




மீனம்:
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுங்கள். புதிய முயற்சிகளில் வெற்றிகள் ஏற்படலாம். பொதுவாக அன்றாடப் பணிகள் நடைபெறுவது தாமதமாகலாம். எதிர்கால நல்வாழ்வுக்கான அஸ்திவார அமைப்பதில் கண்ணும் கருத்துமாய் இருங்கள். முருகப் பெருமானை தொழுது வாருங்கள். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

No comments: