Thursday, January 4, 2018

வாழ்வை வளமாக்கும் முன்னோர்கள் பரிகாரம்:

வாழ்வை வளமாக்கும் முன்னோர்கள் பரிகாரம்:

எந்த விஷயங்கள் தொடங்கினாலும் நமது முன்னோர்களை வணங்கி ஆரம்பித்தால் காரிய வெற்றி உண்டு. கடவுள் இருக்கிறார் இல்லை என்பது விவாதமாகும் ஆனால் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்பதும் அவர்கள்தான் நமக்கு ஆதாரம் என்பதையும் நாம் மறக்கலாகாது. எனவே தினமும் காலை எழுந்தவுடன் முன்னோர்களை நினைத்து ஒரு நிமிடம் வேண்டுவது நம் வாழ்வில் வசந்தத்தை வரவழைக்கும்.



முன்னோர்கள் வழிபாடு என்றவுடன் நாம் அமாவாசை வழிபாட்டையோ அல்லது திதி வழிபாட்டையோ அல்லது தர்ப்பணத்தையோ நினைக்கக் கூடாது. முன்னோர்கள் வழிபாடு என்பது நாம் அவர்களை நினைத்து மனமுருக வேண்டுவது. அவ்வளவே. மனமுருக வேண்டுவது என்பதற்கு பிறகுதான் காசி, ராமேஸ்வரம், திரிவேணி சங்கமம் வழிபாடு எல்லாமே. முன்னோர்களை திட்டிக் கொண்டே மேற்சொன்ன க்ஷேத்திரங்களுக்கு சென்றால் எந்த பலனும் கிடைக்காது.

ஒரு விஷயம் நினைவில் கொள்ள வேண்டும். முன்னோர்கள் நமக்கு நன்மை மட்டுமே செய்வார்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண் ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

No comments: